உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி பவளமலையில் சஷ்டி சிறப்பு பூஜை

கோபி பவளமலையில் சஷ்டி சிறப்பு பூஜை

கோபி: கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோபி அருகே பவளமலை முருகன் கோவிலில் நேற்று (நவ., 1ல்) சிறப்பு பூஜை நடந்தது. பவளமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா, அக்.,28ல் துவங்கியது. ஐந்தாவது நாளான நேற்று (நவ., 1ல்), மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், யாகசாலை பூஜை, திரவ்ய ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. இதேபோல் பச்சமலை முருகன் கோவிலிலும், சிறப்பு ஹோமம் மற்றும் அர்ச்சனை நடந்தது.

* ஆப்பக்கூடல் அருகே, பிரசித்தி பெற்ற கோவிலான, கணேச பாலதண்டாயுத பாணி மலைக் கோவிலில், சஷ்டி விழா ஐந்தாம் நாளான நேற்று,  (நவ., 1ல்) பாலதண்டாயுதபாணி முருகன், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !