ஈரோடு ராஜகணபதி கோவிலில் திருஷ்டி துர்கா ஹோமம்
ADDED :2210 days ago
ஈரோடு: ஈரோடு, இடையன்காட்டு வலசு, ராஜகணபதி கோவிலில், கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் பல்வேறு பூஜைகள் நடந்தன.
தீயவர்கள் சூழ்ச்சியில் இருந்து விடுபடும் திருஷ்டி துர்கா ஹோமம், ஸ்கந்த ஹோமம் நேற்று (நவம்., 1ல்) நடந்தது. இன்று (நவம்., 2ல்) மாலை, 5:00 மணிக்கு சூரசம்ஹாரம், நாளை (நவம்., 3ல்) காலை, 9:00 மணிக்கு திருக்கல்யாணம், விருந்து நடப்பதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.