உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலகுமலை கோவிலில் சூரசம்ஹாரம்

அலகுமலை கோவிலில் சூரசம்ஹாரம்

அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில், நேற்று கந்தர்சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடந்தது.

அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் கடந்த, 28 ஆம் தேதி கந்தர் சஷ்டி திருவிழா துவங்கியது. விநாயகர் பூஜை நடந்தது. மலை அடிவாரத்தில் உள்ள முத்து திருமண மண்டபத்தில், பக்தர்கள் கங்கணம் அணிந்து விரதம் துவக்கினர். தொடர்ந்து கந்தர்சஷ்டி கவசம் பாராயணம், ஆலயதரிசனம், ஆசிரமத்தில் வேலுக்கு அபிஷேகம், பஜனை, மகா தீபாராதனை, சத்சங்கம் கூட்டுப்பிரார்த்தனை உள்ளிட்டவை நடந்தது. நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு பட முருகப் பெருமான் தன் தாயார் பத்மாவதி தேவியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:00 மணியளவில் கந்தர்சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடந்தது. பல்வேறு உருவம் தரித்து போருக்கு வந்த சூரனை, முருகப்பெருமான் தன் சக்தி வேலால் வதம் செய்தார். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பினர். பின்,6:30 மணிக்கு பக்தர்கள் ஆசிரமத்தில் கங்கணம் அவிழ்த்து விரதத்தை முடித்தனர். இரவு, 7:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இன்று காலை,10:30 மணி அளவில் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம், திருக்கல்யாண விருந்து ஆகியவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !