உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கோவிலில் சூரனை வதம் செய்த கந்தன்

திருப்போரூர் கோவிலில் சூரனை வதம் செய்த கந்தன்

 திருப்போரூர்:திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா, அக்டோபர், 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் பிரதானமான சூரசம்ஹாரம், நேற்று நடந்தது.இதை ஒட்டி, கோவில் நடை அதிகாலை, 4:00  மணிக்கு திறக்கப்பட்டது. மதியம், 12:15 மணிக்கு, உற்சவர் கந்த சுவாமி, சரவண பொய்கை குளத்தில் தீர்த்தவாரி ஆடினார்.பின், மாலை, 6:30 மணிக்கு, வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர், போருக்கு புறப்பட்டார். முன்னதாக, வீரபாகு வேடமணிந்த  சிறுவர்கள், கெஜமுகன், பானுகோபன், அஜமுகி, தாருகன், சிங்கமுகன் ஆகிய ஐந்து அசுரர்களை வதம் செய்தனர்.தொடர்ந்து, உற்சவர் கந்த சுவாமி, நெம்மேலி சாலை வரை விரட்டிச் சென்று, சூரபத்மனை சக்தி வேலால் வதம் செய்தார்.கோவில் கிழக்கு மாடவீதி மற்றும்  சன்னதி தெருவில், ஏராளமான பக்தர்கள் குவிந்து, இந்நிகழ்ச்சியை பார்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !