பண்ருட்டியில் சூரசம்ஹார நிகழ்ச்சி
ADDED :2210 days ago
பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டியை முன் னிட்டு, நேற்று முன்தினம் (நவம்., 2ல்), சூரசம்ஹாரம் நடந்தது.மாலை 4:00 மணிக்கு மூலவர் சுப்ரமணிய சுவமிக்கும், உற்சவர் சுப்ரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.இரவு 6:30 மணிக்கு உற்சவர் சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 7:00 மணிக்கு உற்சவர் சுப்ரமணியர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 7:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.