உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் பணிபுரிந்த கடலூர் போலீசாருக்கு சான்றிதழ்

காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் பணிபுரிந்த கடலூர் போலீசாருக்கு சான்றிதழ்

கடலுார்:காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் பணிபுரிந்த, கடலுார் மாவட்ட போலீசாருக்கு, முதல்வரின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அத்திவரதர் விழா 48 நாட்கள் நடைபெற்றது. இதில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் பங்கேற்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு முதல்வரின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உட்பட 2 ஏ.டி.ஏ.எஸ்.பி.,க்கள், 8 டி.எஸ்.பி.,களுக்கு முதல்வர் பழனிச்சாமி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கடலுார் மாவட்ட த்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் 1,230 பேருக்கு முதல்வரின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களின் டி.எஸ்.பி., க்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல்நிலைய போலீசாருக்கு சான்றிதழ்களை வழங்கினர். அதன்படி, கடலுார் உட்கோட்டத்தில் உள்ள 200 போலீசாருக்கு டி.எஸ்.பி, சாந்தி, முதல்வரின் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !