திருக்கல்யாணத்திற்கு திருப்பரங்குன்றத்தில் சீர்வரிசை
ADDED :2210 days ago
திருப்பரங்குன்றம்:மதுரை சோலைமலை முருகன் கோயிலில் நேற்று 3 ல், நடந்த கந்தசஷ்டி திருக் கல்யாணத்திற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து சீர்வரிசைகள் கொண்டு செல்லப்பட்டன.
சோலைமலை முருகனுக்கு அணிவிக்க வெண்பட்டு, வள்ளி, தெய்வானைக்கு சிவப்பு கலந்த மஞ்சள் பட்டு, பச்சை பட்டு, வாழைத்தார், பழ வகைகள், இனிப்புகள், பழங்கள் உள்ளிட்ட சீர் வரிசைகள் திருப்பரங்குன்றம் கோயில் சார்பில் கொண்டு செல்லப்பட்டன.