அக்னி ஜீவாலையாக பூமாத்தாள்!
ADDED :2207 days ago
செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் அருகில் பாலாற்றைக் கடந்தால் உள்ளது வடபாதிமங்கலம் என்ற ஊர். இத்திருத்தலத்தில் கல்லால மரத்தை விருட்சமாகக் கொண்ட வளாகவும். இடது விழி மேல் நோக்கியும், வலது கண் பூமியை நோக்கிய படியும் ஒரு காதில் குழந்தையைக் குண்டலமாகவும் இடது காலில் மகர குண்டலமும் அணிந்து, அமர்ந்த நிலையில் பிரம்ம தேஜஸுடன் விளங்குகிறாள் அன்னை பூ மாத்தாள். அன்னையின் சிரசில் தட்சிணாமூர்த்திக்கு உரியது போலவே அக்னி ஜீவாலை காட்சியளிக்கிறது.