உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையில் சென்றது கிணற்றில் கிடைத்தது!

கங்கையில் சென்றது கிணற்றில் கிடைத்தது!

காசியும் தமிழகத்தின் அவிநாசியும் ஒன்றே என்பார்கள் பெரியோர். இதை மெய்பிக்கும் ஒரு தகவல். அவிநாசி சிவன் கோயிலுக்கு வடப்புறத்தில் வசித்த வள்ளல் தம்பிரான் என்ற அன்பர். ஒருமுறை காசிக்குச் சென்றார். அவர், வழிச்செலவுக்கான பணத்தை ஒரு  சிறிய உருளையில் போட்டுவைத்திருந்தார். அவர் கங்கையில் நீராடும்போது, ஆற்றோடு சென்றுவிட்டது அந்த உருளை. காசியிலிருந்து திரும்பிய பிறகு, அவிநாசி கோயிலுக்குச் சென்றவர், சுவாமியை  வழிபட்டு வலம்வரும்போது, அந்தக் கோயிலின் கிணற்றில் காசியில் தொலைத்த தன்  கை உருளையைப் பார்த்தார். காசிக் கங்கையே அவிநாசியில் கிணறாக உள்ளது என்று உணர்ந்துமகிழ்ந்தார். இந்த மகிமையை ‘புக்கொளி மாலை ’ எனும் நூல் விவரிக்கிறது.

காசியில் தவசி வராகன் ஐந்நூறு
கைத்தண்டுள் வைத்தது தவறி

ஓசைசேர் கங்கை வீழ்ந்து அமிழ்ந்திடவும்
உறுதியரவன் அவிநாசி

பேசிய காசிக்கிணற்றினில் தண்டு
பிறங்கிடக் கண்டு உளம் மகிழ்ந்தான்

வாசிய காசிவிசேடப் புக்கொளியில் வளர்
பெருங்கருணை நாயகியே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !