இவள் ஒரு பூமகள்!
ADDED :2356 days ago
செந்தாமரை மலரில் அமர்ந்திருப்பவள் லட்சுமி. அந்த மலரின்அடிப்படையில் அவளுக்கு பலவிதமான பெயர்கள் உண்டு.தாமரையில் பிறந்தவள் என்பதால் பத்மேமாத்பவம். தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள் என்னும் பொருளில் ‘பத்மாலயாம்’. தாமரை போன்ற முகம் கொண்டவள் என்பதால் ‘பத்மமுகி’. இருகைகளிலும் தாமரை மலர் ஏந்தியிருப்பவள் என்பதால் ‘பத்மஹஸ்தாம்’ அங்கம் முழுவதும் தாமரை மலர்போல நறுமணம் கொண்டவள் என்பதால் ‘பத்மகந்தி’நாபிக்கமலத்தில் (தொப்புள்)தாமரையை ஏந்தியிருக்கும் விஷ்ணுவுக்கு பிரியமானவள் என்னும் பொருளில், ‘பத்மநாப பிரியா’. அவளது கண்கள் தாமரை போல்மலர்ந்திருப்பதால்‘பத்மநளாய தாட்சி’. இதுதவிர, செந்தாமரை மலராள், தாமரையாள்,அலர்மேல் மங்கைஎன்னும் பெயர்களும்தாமரை மலரைக் குறிக்கும் விதத்தில் உள்ளன.