அன்னாபிஷேக தத்துவம்!
ADDED :2208 days ago
சிவன் அபிஷேகப்பிரியர். உலகத்தில் உள்ள அனைத்துமே, சிவனுக்கே சொந்தம். அனைத்து உயிர்களும் வாழ ஆதாரமாக இருப்பது உணவு. உணவே, நம் உடலையும், உயிரையும் காப்பதாக இருக்கிறது. இந்த உணவைத் தரும் மூலப்பொருளாகிய சிவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர் கொடுத்ததை அவருக்கே படைத்து வணங்குகிறோம். இந்நாளில் அன்னத்தால் (வெள்ளைச்சோறு) சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர். லிங்கத்தை அன்னத்தால் அலங்கரித்து, அதன்மீது காய்கறி, பழம், இனிப்பு வகைகள் உட்பட அனைத்து உணவுகளையும் கொண்டு அலங்காரம் செய்வர். சிவனே, இந்த உணவாக இருந்து நம்மை காக்கிறார் என்பதை,அன்னாபிஷேக தத்துவம் உணர்த்துகிறது.