உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலாலம்பூர், பத்துமலை ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

கோலாலம்பூர், பத்துமலை ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

புதுச்சேரி: பஞ்சவடி பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் மூலம், மலேசியா கோலாலம்பூர் பத்துமலை திருத்தலத்தில், ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் வரும் 10ம் தேதி நடக்கிறது.

மலேசியா, கோலாலம்பூர், பத்துமலை திருத்தலம், அலர்மேல்மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் வரும் 10ம் தேதி, மாலை 4:00 மணி முதல் 8:00 மணிக்கு, மத்திய திருப்பதி என அழைக்கப்படும், புதுச்சேரி அருகில் உள்ள பஞ்சவடி பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டினால், ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண நடத்தி வைக்கப்பட உள்ளது. அன்று மாலை 4:00 மணிக்கு, மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. மாலை 4:15 மணிக்கு, தாமல் ராமக்கிருஷ்ணன், பத்துமலை அலர்மேல்மங்கா சமேத வெங்கடாசலபதி கோவிலின் மகிமை, திருக்கல்யாண வைபவ வர்ணனை நடக்கிறது. மாலை 5:10 மணிக்கு, அறங்காவலர்கள் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ நடராஜா மற்றும் அறங்காவலர்களுக்கு சங்கல்பம் நடக்கிறது.

மாலை 5:30 மணிக்கு காசி யாத்திரை, 5:45 மணிக்கு திருக்கல்யாண மாலை மாற்றுதல், மாலை 6:40 மணிக்கு புண்யாஹவாசனம், கண்ணுஞ்சல், பிடி சுற்றுதல், அக்னி பிரதிஷ்டை நடக்கிறது. மாலை 6:50 மணிக்கு பாலிகை பூஜை, அங்குரார்பணம், ராமபாதுகா பூஜை, இரவு 7:10 மணிக்கு வஸ்த்ர தாரணம், இரவு 7:20 மணிக்கு கோத்ர ப்ரவரம், கன்னிகாதனம், மாங்கல்ய பூஜை மற்றும் திருமாங்கல்ய தாரணம் நடக்கிறது. இரவு 7:45 மணிக்கு ஆண்டாள் பாடிய வாரணம் ஆயிரம் (தேங்காய் விளையாடுதல்) நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திவ்ய தம்பதிகளின் அட்சதை ஆசீர்வாதமும், மங்கள ஆரத்தியும் நடக்கிறது. இரவு 8:10 மணிக்கு திருக்கல்யாண பிரசாதம் வழங்கப்படுகிறது. திருக்கல்யாண வைபத்தை, அறங்காவலர்கள் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ நடராஜா மற்றும் பஞ்சவடி பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், துணை தலைவர் யுவராஜன், பொருளாளர் கச்சபேஸ்வரன், அறங்காவலர்கள் கே.வெங்கட்ராமன், பழனியப்பன், ராஜகோபாலன், செல்வம் தலைமையிலான திருக்கல்யாண வைபவ சிறப்பு குழுவினர் நடத்தி வைக்கின்றனர். மேலும் பஞ்சவடீயில் உள்ள சொர்ண ஸ்ரீராம பாதுகையானது மலேசியாவில் நடைபெறும் இந்த  திருக்கல்யாணத்திற்கு எழுந்தருள செய்து திருமஞ்சனம் மற்றும் அர்ச்சணை நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !