சந்தனக் காப்பு அலங்காரத்தில் குரு பகவான்
ADDED :2347 days ago
புதுச்சேரி: சித்தானந்த சுவாமி கோவிலில், குரு பகவான் சந்தனக் காப்பு அலங்காரத்தில் நேற்று அருள் பாலித்தார். புதுச்சேரி கருவடிக்குப்பத்தில், பிரசித்திப் பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 29ம் தேதி அதிகாலையில், குரு பெயர்ச்சி விழா நடந்தது. குரு பெயர்ச்சியை தொடர்ந்து, இரண்டாவது வியாழக்கிழமையான நேற்று, சித்தானந்த சுவாமி கோவிலில், தட்சணாமூர்த்தி குரு பகவானுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.