குளித்தலை மண்டகபடியுடன் கந்த சஷ்டி விழா நிறைவு
ADDED :2165 days ago
குளித்தலை: தோகைமலை பாலதண்டாயுதபாணி மலைக்கோவிலில், மண்டகபடியுடன், கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது. குளித்தலை அடுத்த, தோகைமலையில், பாலதண்டாயுத பாணி மலைக்கோவில் உள்ளது. இதில், கந்தசஷ்டி விழா, கடந்த, 10 நாட்களாக விமரிசையாக நடந்தது.
தினம் ஒரு சமுதாயத்தவர் சார்பில், சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று (நவம்., 8ல்), மண்டக படி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, திருவீதி உலா நடந்தது. கந்தசஷ்டி விழா முடிந்து, பாலதண்டாயுதபாணி சுவாமி மீண்டும் மலைக்கோவிலுக்கு எழுந்தருளினார். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர்