நெல்லிக்குப்பம் நந்திகேஸ்வரருக்கு 108 குடம் பால் அபிஷேகம்
ADDED :2235 days ago
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில், சனி பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திகேஸ்வரருக்கு 108 குடம் பால் அபிஷேகம் நடந்தது.
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு 108 குடம் பால், தயிர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பூலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கைலாசநாதர், எய்தனூர் ஆதிபுரீஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவில்களில் பிரதோஷ பூஜைகள் நடந்தது.