பொள்ளாச்சியில் சத்ய சாய் சேவா சமிதி சார்பில் தொடர் பஜனை
ADDED :2229 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சத்ய சாய் சேவா சமிதி சார்பில், உலக நன்மைக்காக தொடர் பஜனை நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி சத்ய சாய் சேவா சமிதி சார்பில், தொடர் பஜனை, வெங்கடேசா காலனியில் உள்ள சாய்மதுரம் கோவிலில் நேற்றுமுன்தினம் துவங்கியது.நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு துவங்கி, நேற்று மாலை, 6:00 மணி வரை, உலக நன்மைக்காக, 24 மணி நேர அகண்ட நாம பஜன் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சாய் பஜனை பாடல்களை பாடினர். உலக நன்மை பெற வேண்டி வழிபாடு செய்தனர். உலக நன்மை வேண்டி உலகம் முழுவதும் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி மூலம் 24 மணி நேர அகண்ட பஜன் நடத்தப்படுகிறது. அந்த வகையில், பொள்ளாச்சியில் நடத்தப்பட்டது, என சாய்பாபா பக்தர்கள் தெரிவித்தனர்.