உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு வீரட்டானேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது.

அட்டவீரட்டானத்தில் ஒன்றான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு சாதம், காய்கறிகளை கொண்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, 7:00 மணிக்கு சிவபுராணம், சிவ கோஷத்துக்கு இடையே ஷோடசோபசார தீபாராதனை நடந்தது.

இரவு 8:00 மணிக்கு அலங்காரம் களையப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரன பூஜை, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை ஏற்பாட்டில் கோவில் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !