வித்யா கணபதி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2166 days ago
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் வித்யா கணபதி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. நவ., 9 காலை 7:00 மணிக்கு அனுக்ஞையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கும்பங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடாகின. காலை 6:30 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகம் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீவித்யா கணபதிக்கு பல்வேறு அபிேஷகம் நடத்தப்பட்டு, கும்பாபிேஷகம் செய்யப்பட்டது.சவுராஷ்ட்ரா கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கோவிந்தன், செயற்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.