நத்தம் அருகே கும்பாபிஷேக விழா
ADDED :2170 days ago
நத்தம் : நத்தம் அருகே சிறுகுடியில் சந்திவீரன் முரங்கன சுவாமி, செம்பாயி அம்மன் ஆகிய கோயில்களின்கும்பாபிஷேக விழா நடந்தது.கடந்த ஞாயிறு அன்று மாலையில் கிராம சங்கல் பம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜை, அங்குரார் ப்பணம், ஆச்சார்ய வர்ணம், கும்ப அலங்காரம், உள்ளிட்ட முதல்கால யாக பூஜைகள் நடந்தது.
இரவு பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று (நவம்., 11ல்) காலை கோ பூஜை, சுவாமி ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், பூர்ணாஹூதி உள்ளிட்ட இரண்டாம் கால யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திரளானோர் கலந்து கொண்டனர்.