உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு ஜீவ சமாதியில் சிறப்பு பூஜை

நடுவீரப்பட்டு ஜீவ சமாதியில் சிறப்பு பூஜை

நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில், ஜீவ சமாதியடைந்த சித்தருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவி லில் பல ஆண்டுகளுக்கு முன், வசித்து ஜீவசமாதியடைந்தவர் சித்தர் பரங்கிப்பேட்டையார் என்கிற குழந்தைவேல் சுவாமிகள்.இவர் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர். நேற்று முன்தினம் (நவம்., 10ல்) ஐப்பசி மாதம் ரேவதி நட்சத்திரம். அதனை முன்னிட்டு மதியம் 1:00 மணிக்கு சித்தர் ஜீவ சமாதியடைந்த இடத்தின் மேல் உள்ள பீடத்திற்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !