உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேகம்

பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேகம்

மதுரை:  பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி,  உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு  அன்னாபிஷேக சிறப்பு அர்ச்சனை அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !