திருப்பரங்குன்றம் கோயில்களில் அன்னாபிஷேகம்
ADDED :2338 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தன.
சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் தனி சன்னதியில் எழுந்தருளிய சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து அன்னாபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில்களில் மூலவர்களுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மலைக்குப் பின்புறமுள்ள பால்சுனை கண்ட சிவபெருமான், பஞ்சலிங்கத்திற்கு மூலிகை அபிஷேகம் முடிந்து அன்னம் சாத்துப்படி செய்து, பழங்கள், காய்கறிகள் படைக்கப்பட்டது. திருநகர் சித்தி விநாயகர் கோயில், பாண்டியன் நகர் கல்யாண விநயாகர் கோயில்களில் காசிவிஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.