உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாலையணிய தயாராகும் ஐயப்ப பக்தர்கள்

மாலையணிய தயாராகும் ஐயப்ப பக்தர்கள்

கம்பம், சபரிமலைக்கு விரதம் இருக்க ஐயப்ப பக்தர்கள் தயாராகி வருகின்றனர். இப்போதே காவி வேட்டி, துளசி மாலை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.


சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் கார்த்திகை மாதம் முதல் நாளான நவ. 17 ல் துவங்குகிறது. அன்று மாலையணிந்து விரதத்தை துவக்க இருப்பதால், இப்போதே அதற்கான ஆயத்த ஏற்பாடுகளில் இறங்கி வருகின்றனர். முதன் முதலாக மாலையணிவோரை கன்னிச் சாமி என்று அழைப்பது வழக்கம். அவர்கள் புதிதாக காவி வேட்டி, துண்டு, துளசிமாலை மற்றும் இருமுடி பை உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்க வேண்டும். அவற்றை கடைகளில் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டுதோறும் மாலையணியும் பக்தர்கள் தங்களின் துளசிமாலை மற்றும் வேட்டி துண்டுகளை பத்திரப்படுத்தி வைத்திருப்பர். அதை எடுத்து சலவை செய்து தயார் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !