மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
2127 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
2127 days ago
ரிப்லி என்பவர் எழுதிய நம்பினால் நம்புங்கள் புத்தகத்தில் ஒரு இரும்புத் துண்டு பற்றி எழுதியுள்ளார்.ஒரு சாதாரண இரும்புத் துண்டின் விலை 5 டாலர் (இந்திய மதிப்பில் ஒரு டாலர் ரூ.௭௧). அதையே குதிரையின் லாடமாக வடித்ததும் 50 டாலராக விலை உயர்ந்து விடுகிறது. தையல் இயந்திரமாக வடிவமைக்கும் போது அதன் விலை 500 டாலராகிறது. ஸ்விஸ் வாட்சின் மெல்லிய ஸ்பிரிங்காக மாற்றியதும் அதன் விலை 5000 டாலராகி விடும். ஆக, 5 டாலர் மதிப்புள்ள ஒரு பொருள், அதை பதனிட்டு வேறு பொருளாக மாற்றும் போது விலை உயர்ந்து கொண்டே போகிறது. இது போல ஆற்றலை, நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். திறமையை நல்ல முறையில் பயன்படுத்தினால் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை அமையும். சாதாரண இரும்புத் துண்டு, பொருளாக மாறும் போது அதன் மதிப்பு உயர்வது போல, மனிதர்களும் தங்கள் திறமையை நல்ல முறையில் பயன்படுத்தினால் சமுதாயத்திற்கு நன்மைகள் கிடைக்கும்.
2127 days ago
2127 days ago