ஹரி கதை கேளுங்க!
ADDED :2126 days ago
விஷ்ணு வழிபாட்டிற்கு இரண்டு விஷயங்கள் அவசியம். ஒன்று விரதம். மற்றொன்று ஹரிகதை (பக்திக்கதை) கேட்பது. உபவாசம் என்பதற்கு பட்டினி கிடப்பது கூட வசிப்பது என இரு பொருள் உண்டு. அதாவது கடவுள் சிந்தனையுடன் இருப்பதே உபவாசம்.வயிற்றுக்கு ஓய்வு அளிப்பதே விரதத்தின் நோக்கம். இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். பக்திக் கதைகளைக் கேட்பதால் மனம் துாய்மை பெறும். தாயின் வயிற்றில் இருக்கும் போதே ஹரிகதையைக் கேட்டதால் தான் பிரகலாதன் பக்தனாக விளங்கினான். திருவோணம், ஏகாதசி போன்ற விரத நாட்களில் பக்திக்கதை கேட்பது, பகவானின் திருநாமங்கள் பாடுவது, ஆழ்வார்கள் பாடிய பிரபந்தகளைப் பாடினால் புண்ணியம் கிடைக்கும்.