உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா

ஊத்துக்கோட்டை சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா

ஊத்துக்கோட்டை:சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள  பகுதிகளில் உள்ள சிவாலங்களில் நடந்த, அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை  வாய்ந்த இக்கோவிலில், சிவபெருமான் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறார். இக்கோவி லில் வால்மீகி முனிவர் பூஜித்த வால்மீகீஸ்வர  சுவாமிக்கு, ஐப்பசி மாத பவுர்ணமி நாளான நேற்று (நவம்., 12ல்), அன்னாபிஷேக விழா  நடந்தது.அரிசி சாதத்தால் மூலவர் சிறப்பு அலங் காரத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். பச்சைக் காய்கறிகள், இனிப்பு வகைகள் படை யலாக பரிமாறப்பட்டன.இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

இதேபோல், ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர்  கோவில், தாரா ட்சி லோகாம்பிகை சமேத பரதீஸ்வரர் கோவில், மெய்யூர்  மெய்கண்டேஸ்வரர் கோவில், வடதில்லை, பாபஹரேஸ்வரர் கோவில் மற்றும்  சுற்றியுள்ள சிவாலயங்களில் அன்னா பிஷேக விழா சிறப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !