உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு

திருப்போரூர் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள கோவில்களில் நடைபெற்ற  அன்னாபிஷேக த்தில், பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.

ஐப்பசி பவுர்ணமியையொட்டி, திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள திருப்போரூர்  கந்தசுவாமி கோவில், ஆமூர் இறையாயிரமுடையார் கோவில், மானாமதி அடுத்த  அகரம் கைலாசநாதர் கோவில் உட்பட, பல கோவில்களில், அன்னாபிஷேகம்,  நேற்று நடைபெற்றது.இதையொட்டி, மூலவருக்கு அன்னத்தால் அபிஷேகம்  மற்றும் சிறப்பு அலங்காரத்துடன், தீப துாப ஆராதனை செய்யப்பட்டது.  இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர்  அக்னீஸ்வர் உட்பட, மாவட்டத்தின் பல கோவில்களில் அன்னாபிஷேகம்  நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !