புதுச்சத்திரத்தில் ஊஞ்சல் உற்சவம்
                              ADDED :2178 days ago 
                            
                          
                           புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அடுத்த சிண்ணாண்டிக்குழி அமிர்தவள்ளி அம்மன்  கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் (நவம்., 11ல்) இரவு 8.00 மணிக்கு அம்மன் மற்றும் முருக னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு அமிர்தவள்ளி அம்மன், முருகன், வள்ளி, தெய்வானை சிறப்பு  அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, பம்பை, உடுக்கையுடன் கோவிலை சுற்றி  வலம் வந்தது. இரவு 10.00 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானை, விநாயகர்,  அமிர்தவள்ளி அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து, தாலாட்டு பாடும் நிகழ்ச்சி  நடந்தது. இதில் சுற்று பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.  அன்னதானம் வழங்கப்பட்டது.