பள்ளிபாளையம் நாகமகா சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்
ADDED :2189 days ago
பள்ளிபாளையம்: வசந்தநகர் ஆற்றோரத்தில் உள்ள நாகமகா சுவாமிக்கு சந்தன காப்பு அலங் காரம் நடந்தது. பள்ளிபாளையம் அடுத்த வசந்தநகர் பகுதியில் காவிரி ஆற்றோரத்தில் நாகமகா சுவாமி ஜீவசமாதி, மற்றும் திருவுருவம் உள்ளது. நேற்று (நவம்., 12ல்) ஐப்பசி பவுர்ணமி முன்னி ட்டு சுவாமிக்கு, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.