உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எலச்சிபாளையம் நாகேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா

எலச்சிபாளையம் நாகேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா

எலச்சிபாளையம்: பெரியமணலி நாகேஸ்வரர் கோவிலில் நேற்று (நவம்., 12ல்), அன்னாபிஷேக விழா நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில் உள்ள நாகேஸ்வரர், வேணு கோபால் சுவாமி கோவிலில், ஐப்பசி பவுர்ணமியான நேற்று (நவம்., 12ல்), அன்னாபிஷேக விழா நடந்தது. மாலை, 4:00 மணிமுதல் 5:00 மணிவரை, நாகேஸ்வரர்சுவாமி அன்ன அலங்காரத்துடன் அருள்பாலிப்பாலித்தார். மாலை, 6:30க்கு சிவகாமியம்மை உடனமர் நாகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா எழுந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !