ஓமலூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைபவம்
ADDED :2189 days ago
ஓமலூர்: நங்கவள்ளியில், பெரிய மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 11ல், சக்தி அழைத்தலுடன் தொடங்கியது. நேற்று, லட்சுமி நரசிம்மர் கோவிலிலிருந்து, திரளான பக்தர்கள், பால்குடம் எடுத்து, ஊர்வலமாக, கோவிலுக்கு வந்தனர். இன்று, எருமை கிடா வெட்டு தல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், திருவீதி உலா, அக்னி கரகம், வாணவேடி க்கை நடக்கிறது. நாளை, மஞ்சள் நீராட்டுதலுடன் விழா முடிவடையும். அதேபோல், நங்கவள்ளி யை சுற்றியுள்ள அட்டைவன வனவாசி, தேவஸ்தான வனவாசி, வன்னியர் மாரியம்மன் உள்பட, 18 பட்டி அம்மன் கோவில்களில் பண்டிகை நடந்து வருகிறது.