சிவபெருமான், பார்வதி திருக்கல்யாண உற்சவம்
ADDED :4924 days ago
ஊத்துக்கோட்டை:சிவபெருமான், பார்வதி திருக்கல்யாண நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.ஊத்துக்கோட்டை அடுத்த, மாம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது, மங்களாம்பிகை உடனுறை மார்க்கண்டேஸ்வரர் சுவாமி கோவில். சிதிலமடைந்து காணப்படும் இக்கோவில் சீரமைக்கப்பட்டு, தற்போது பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை இக்கோவிலில், சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அம்மனுக்கு வழங்க வேண்டிய சீர்வரிசை, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது. தொடர்ந்து சிவபெருமான், பார்வதிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, அலங்காரம் நடந்தது. பின், சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ஜெயராமன் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.