திருப்பதி பாதயாத்திரை இன்று துவங்குகிறது!
ADDED :4974 days ago
திண்டிவனம்:திண்டிவனம் வெங்கடாஜலபதி பக்த சமாஜத்தின் திருப்பதி யாத்திரை இன்று துவங்குகிறது.திண்டிவனம் நல்லியக்கோடான் சீனுவாச பெருமாள் சன்னதியிலிருந்து திருத்துழாய் மாலை அணிந்து, பக்தர்கள் பாதயாத்திரை புறப்படுகின்றனர். இப்பாதயாத்திரை பயணம் திண்டிவனத்தில் துவங்கி தெள்ளார், வந்தவாசி, மாங்கால், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, நகரி, புத்தூர் வழியாக திருப்பதிக்கு சென்றடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை வெங்கடாஜலபதி பக்த சமாஜத்தின் நிர்வாகிகள் ருக்மாங்கத ராமானுஜதாஸர், கண்ணன் ராமானுஜதாசர் செய்து வருகின்றனர்.