உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரத்தியங்கரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்

பிரத்தியங்கரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள, அதர்வன பிரத்தியங்கரா தேவி கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. ஓசூர் அருகே, மோரனப்பள்ளி கிராமத்தில், அதர்வன பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இங்கு, பவுர்ணமியை முன்னிட்டு, நாடு நலம் பெறவும், விவசாயம், தொழில் வளம் பெருகி மக்கள் வளமாக வாழ வேண்டியும், நேற்று முன்தினம் இரவு மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. அதர்வன பிரத்தியங்கரா தேவி அம்மன் முன், பெரிய குண்டங்கள் அமைத்து, அதில் மிளகாய் வத்தலை போட்டு, வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடத்தப்பட்டது. மேலும், சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. ராகு, கேது தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !