உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் அனந்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

சிதம்பரத்தில் அனந்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் அனந்தீஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. சிதம்பரம் அனந்தீஸ்வரர் சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி  சுவாமிக்கு அன்னா பிஷேகம் நேற்று முன்தினம் (நவம்., 12ல்) நடந்தது.

சவுந்திரநாயகி சமேத அனந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு 100 கிலோ அரிசி வடித்து சாதத்தால், அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அனந்தீஸ்வரருக்கு காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !