உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் கோவில்களில் அன்னாபிஷேகம்

கடலுார் கோவில்களில் அன்னாபிஷேகம்

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன்  கோவில்களில் அன்னா பிஷேகம்  நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, கடலுார் பெரியநாயகி உடனுறை  பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (நவம்., 12ல்) காலை சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு, பாடலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.

அதே போல் மஞ்சக்குப்பம் சற்குரு வெட்டவெளி சித்தர் பீடம், மஞ்சக்குப்பம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு அன்னாபிேஷகம் நடந்தது. புதுப்பாளையம் இரட்டை பிள்ளயைார்கோவில் உள்ளிட்ட பல்வேறு  கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.

* விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் (நவம்., 12ல்) காலை, ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.மாலை 4:00 மணிக்கு மேல், 108 கிலோ சாதத்தில் அன்னம் சாற்றும் நிகழ்ச்சி துவங்கியது. மாலை 6:00 மணியளவில் பழங்கள், காய்கறிகள், பூக்கள் வைத்து, அன்னாபிஷேக அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித் தார். சுவாமி மீது சாற்றிய சாதத்தை, பக்தர்கள் பிரசாதமாக பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !