முடிவு உன்னுடையது
UPDATED : ஆக 11, 2023 | ADDED : ஆக 11, 2023
* சகவாசம் யாரிடம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீயே முடிவு செய்* நீங்கள் விரும்புவதை மற்றவர்களுக்கு கொடுங்கள்* உங்களது நடத்தையே உங்களை கவுரவப்படுத்தும்* சொல்லும் வார்த்தைகளில் மென்மை இருக்க வேண்டும்* யாரும் சொல்லித்தராத பாடங்களை அவமானம் கற்றுக் கொடுக்கும்.* நன்மையான செயல்களை செய்து வாழ்பவனே பாக்கியவான்* வெறுப்பு உண்டாகும் செயலை ஒரு போதும் செய்யாதே* கவுரவத்திற்காக வாழும் வாழ்க்கை போலித்தனமானது. * நீ செல்லும் பாதையில் முட்கள் கிடந்தால் விலகாதே. அதை ஓரமாக அப்புறப்படுத்தி செல்.* எதுவும் உன்னுடையது அல்ல இறந்தவுடன் எதுவும் கொண்டு போகப்போவதில்லை.