நிலைப்பது எது
UPDATED : ஆக 25, 2023 | ADDED : ஆக 25, 2023
* வானமும் பூமியும் இல்லாவிட்டாலும் உண்மை நிலைத்து நிற்கும்.* கோபத்தினையும் உணர்ச்சிகளையும் நெறிப்படுத்துபவனே சிறந்தவன். * அமைதியை உண்டாக்குபவன் பாக்கியவான். * நீங்கள் காணும் கனவு வாழ வைக்க வேண்டுமே தவிர தாழ வைக்க கூடாது. * பேசும் வார்த்தைகளில் நிதானமும், செய்யும் செயல்களில் ஆர்பாட்டமும் இல்லையென்றால் அதுவே பாதி வெற்றியை தரும். * எல்லாம் தெரிந்து, அதை வெளியே காட்டிக் கொள்ளாத பணிவே உன்னை உயர்த்தும்.* யாருடனும் வேற்றுமை கொள்ளாதீர். * மகிழ்ச்சியாக இருக்க மனதில் நல்லதையே சிந்தியுங்கள். * அன்பே வடிவான பெற்றோரை தினமும் வணங்குங்கள்.* தினமும் ஏழை, எளியவர்களுக்கு உணவு கொடுங்கள்.