உள்ளூர் செய்திகள்

எது முக்கியம்

* உடலும் உள்ளமும் போல இந்த உயிர் முக்கியமானது.* நமக்கான பணியை நாமே செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சி நிரந்தரம்.* உன்னை ஒருவர் இகழ்வதாலும் புகழ்வதாலும் நீ செய்த பாவ புண்ணியம் அதிகமாகவும் குறைவாகவும் போவதில்லை.* எந்த நிலையிலும் உங்களை விட கீழ்மையானவர்களை ஏமாற்றாதீர். அவர்களை சீண்டவும் செய்யாதீர்.* செயலில் உண்மை இருந்தால் அது தானாக முன்னேற்றம் அடையும். * பளிச்சென்று பேசுங்கள். அது பிறரை காயப்படுத்தாது. * நமக்கு ஏற்பட்ட வலியால் ஒருவர் சிரிக்கலாம். ஆனால் அவருக்கு ஏற்பட்ட வலியால் நாம் சிரிக்கக்கூடாது. * அனைவரையும் நேசியுங்கள். அது உங்களை காப்பாற்றும்.* எதிராளியை விட அருகில் இருப்பவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.* கண்களை மூடிக்கொண்டால் நினைத்தது கிடைக்காது. கடுமையாக உழைக்க வேண்டும் இதுவே நியதி.