உள்ளூர் செய்திகள்

வந்தாள் மகாலட்சுமியே

* கோயில்களில் நடன கோலத்தில் லட்சுமி சிலைகளை அமைத்தவர்கள் கர்நாடக மன்னர்கள் ஹோய்சாளர்கள். * ஆந்திராவின் அஹோபிலத்தில் 'செஞ்சுலட்சுமி' என்ற பெயரில் வேடுவப்பெண்ணாக லட்சுமி காட்சியளிக்கிறாள். * சாளக்கிராம கல்லால் ஆன மகாலட்சுமியை பத்ரிநாத் கோயிலில் தரிசிக்கலாம். * மென்மையும், நளினமும் கொண்டவள் என்பதால் லட்சுமிக்கு 'மலர்மகள்' என்று பெயர். * தீயில் இருந்து லட்சுமி அவதரித்ததாக ஆனந்த ராமாயணம் சொல்கிறது. * பாற்கடலில் லட்சுமியுடன் பிறந்த தேவலோக யானை ஐராவதம்.* வில்வ மரத்தில் லட்சுமி வீற்றிருப்பதாக காளிகா புராணம் சொல்கிறது. * லட்சுமி அம்சமான வில்வ மரத்தை 'ஸ்ரீவிருட்சம்' என அழைப்பர். * ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடியதால் மகாலட்சுமி பொன்மழை பெய்யச் செய்தாள். * செல்வத்தின் அதிபதியாக லட்சுமி குபேரரை குறிப்பிடுகிறது ரிக்வேதம். * நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரன் மகாலட்சுமியின் சகோதரர். * மகாலட்சுமி மீது ஸ்ரீஸ்துதி பாடியவர் வேதாந்த தேசிகன்.