உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கார்த்திகா.எஸ், புதுச்சேரி: தெய்வக்குற்றம் யாருக்கு...கோயில் நிலத்தை அபகரிப்பவர், வழிபாட்டுக்கு இடையூறு செய்பவர், கோயிலில் தகாத செயலை செய்பவர், நேர்த்திக்கடனை செய்யாதவர், அர்ச்சகரை துன்பப்படுத்துபவர்.பவித்ரா.பி, சிவாஜி நகர், பெங்களூரு: தர்ம சிந்தனை குறைகிறதே...பக்தி இருப்பவருக்கு தர்ம சிந்தனை குறையவே குறையாது... அது தானே வரும்.வைஷ்ணவி.டி, நங்கநல்லுார், சென்னை: என்னிடம் உதவி பெற்றவர்களுக்கு நன்றி இல்லையே...நன்றியை எதிர்பார்த்து உதவி செய்யாதீர்கள்.ஸ்ரீதேவி.டி.எஸ், மதுரை: பிரதமை அன்று சுபநிகழ்ச்சி நடத்துவதில்லையே... ஏன்அமாவாசை, பிரதமை, அஷ்டமி, நவமி அன்று சுபநிகழ்ச்சி நடத்துவதில்லை. இந்த நாட்களில் நல்ல தேவதைகளின் சக்தி குறைவாக இருக்கும்.அருள்.சி, பூவசரங்குப்பம், விழுப்புரம்: ருத்ராட்சம் அணிந்தால் திருமணம் தடைபடுமா...கிடையாது. சிவன் அருளால் திருமணம் நடக்கும்.கோமதி.எஸ், மானுார், திருநெல்வேலி: விநாயகரும், முருகப்பெருமானும் சிவபூஜை செய்வது ஏன்?இவர்கள் அசுரர்களைக் கொன்றனர். அதனால் பாவம் தீர சிவபூஜை செய்கின்றனர்.திருச்சிற்றம்பலம்.பெ, பழநி, திண்டுக்கல்: உடல் தானம் செய்யலாமா?புண்ணியம் தரும் இதை கட்டாயம் செய்யலாம். இறந்தவருக்காக கூர்ச்சம் (தர்ப்பை புல்) வைத்து இறப்புச் சடங்கை நடத்துங்கள்.விவேக்.எம், நாகர்கோவில், கன்னியாகுமரி: தமிழ் மாதப்பிறப்பன்று புத்தாடை அணியலாமா?அன்று தீபாவளி, குடும்ப சுபநிகழ்ச்சி என நல்ல நாள் வந்தால் அணியலாம்.மு.வெண்ணிலா, மருதமலை, கோயம்புத்துார்: புதிய முதலீடு செய்ய நல்ல நாள் பார்க்கணுமா...முதலீடு செய்யும் பணத்திற்கு லாபம் வேண்டாமா... நல்ல நாள் பார்ப்பது அவசியம்.