கேளுங்க சொல்கிறோம்
பா.ஜெயஸ்ரீ, கடலுார்* சுபநிகழ்ச்சிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் போது பூனை குறுக்கே வந்தால் ஆகாதா?பூனை குறுக்கே வருவது சகுனத்தடை. இரண்டு நிமிடமாவது அமருங்கள். பின் தண்ணீர் குடியுங்கள். விநாயகரை வழிபட்டு புறப்படுங்கள். எல்.வசந்தா, திருப்பூர்* கோயில் திருப்பணியாக எதைச் செய்யலாம்?கோயிலைத் துாய்மை செய்தல், நந்தவனத்தில் பூப்பறித்து மாலை தொடுத்தல், விளக்கேற்ற எண்ணெய் கொடுத்தல் போன்ற அன்றாட பணிகளில் ஈடுபடலாம். கோயிலில் திருப்பணி நடந்தால் பணஉதவி செய்யலாம். நா.குழந்தைவேலு, பெங்களூரு* ஒரே மாதத்தில் அமாவாசை இருமுறை வந்தால் எப்போது தர்ப்பணம் செய்யலாம்?ஒரே மாதத்தில் இருமுறை அமாவாசை வந்தால் இரண்டிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அமாவாசை இரண்டு நாள் தொடர்ந்தால் 'சர்வ அமாவாசை' எனக் குறிப்பிடப்பட்ட அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.ரா.ஜெயா, திருநெல்வேலி* தலவிருட்ச மரத்தை எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?மூலவர் இருக்கும் கருவறை வளாகத்திற்குள் உள்ள மரம் தலவிருட்சம். இதைப் பற்றிய குறிப்பு தல வரலாற்றில் இருக்கும். இதை தேர்வு செய்யும் உரிமை நமக்கு இல்லை. கே.எல்.கந்தரூபி, திருவேற்காடு* கோத்திரம் என்றால் என்ன?வேத காலத்தில் நம் முன்னோர்கள் ரிஷிகளாக வாழ்ந்தார்கள். எந்த ரிஷியின் பரம்பரையில் ஒருவர் பிறக்கிறாரோ அந்த ரிஷியின் பெயரே அவருக்கான கோத்திரம். கே.மீனா, புதுச்சேரி* அம்மனுக்கு சாற்றும் எலுமிச்சை மாலையில் எத்தனை பழங்கள் இருக்க வேண்டும்?27, 54, 108 என்ற எண்ணிக்கையில் பழங்கள் இருக்க வேண்டும்.எம்.செல்வம், சென்னை* பூஜையின் போது தனியாக திருவாசகம் பாடக் கூடாதா?அப்படி எந்த விதியும் இல்லை. தனிமையில் மனம் உருகி பாடி வழிபட்டால் நல்லது தானே. ஆ.சங்கரசுப்ரமணி, முறப்பநாடு, துாத்துக்குடி* சாப்பிட்ட எச்சில் இலையை பசுவுக்குக் கொடுக்கலாமா?எச்சில் இலையைக் கொடுக்க கூடாது. பசு புனிதமானது என்பதால் அதற்கு கோபூஜை செய்கிறோம்.வி.வாசுதேவன், கோவை* தொடர்ந்து பாவத்தில் ஈடுபடுபவர் பரிகாரம் செய்தால் பலன் கிடைக்குமா?பலன் கிடைக்காது. பரிகாரத்தால் பாவம் தீரும் என நினைப்பதே தவறு. மனம் திருந்துவது ஒன்றே தீர்வு.கே.ராகவன், சிவகாசி* வளர்பிறை, தேய்பிறை இதில் எப்போது திருமணம் நடத்தலாம்?* வளர்பிறை பஞ்சமி முதல் தேய்பிறை பஞ்சமி வரை - முதல் தரம்.* தேய்பிறை சஷ்டி முதல் தேய்பிறை தசமி வரை - இரண்டாம் தரம்.* தேய்பிறை ஏகாதசி முதல் வளர்பிறை சதுர்த்தி வரை - மூன்றாம் தரம்.