மகிழ்ச்சிக்கு குறைவில்லை
சயனகோலத்தில் ரங்கநாதரை பார்த்திருப்பீர்கள். நின்ற கோலத்தில் அவர் எங்கிருக்கிறார் தெரியுமா... கர்நாடக மாநிலம் ராம நகரம் மகடி என்ற தலத்தில் தான். இங்கு தரிசிப்போரின் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார் மாண்டவ்ய முனிவர். அப்போது மகடி எனப்படும் சுவர்ணாசல சேத்திரத்தில் தவம் செய். உனக்கு காட்சியளிக்கிறேன் என வரம் அளித்தார். அதன்படி தவம் இருந்து முனிவர் பலன் அடைந்தார். கண்வ மகரிஷி, சுகப்பிரம்மர் இங்கு வழிபட்டு நற்பேறு பெற்றனர். தாயார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் மேற்கு நோக்கியபடி மூலவர் ரங்கநாதர் கருவறையில் காட்சி தருகிறார். சனிக்கிழமை, ஏகாதசி, திருவோண நாட்களில் விரதமிருந்து தரிசித்தால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். இங்கு நடக்கும் சித்திரை பிரம்மோற்ஸவம் விசேஷமானது. இங்கு நரசிம்மர், பெருமாள், மகாலட்சுமி, சீதாராமர், கருடன், அனுமன் சன்னதிகள் உள்ளன. கோயிலுக்குள் மாண்டவ்ய முனிவர் ஏற்படுத்திய தீர்த்தம் உள்ளது. அந்நியர்கள் இப்பகுதியில் உள்ள சிவன், மகாவிஷ்ணு கோயில்களின் மீது படையெடுத்து விலையுயர்ந்த ஆபரணம், பொக்கிஷங்களை கொள்ளையடித்து வந்தனர். அவர்களுக்கு மைசூரு ஆதிரங்கநாதர் மீது மட்டும் பக்தி உண்டு. அதனால் மகடி ரங்கநாதர் கோயில் மீது படையெடுத்து வந்த போது, மைசூரு ஆதிரங்கநாதரே நின்ற கோலத்தில் இங்கிருக்கிறார் என ஊரார் தெரிவித்தனர். அவர்களும் இக்கோயிலில் கொள்ளையடிக்காமல் திரும்பினர். சோழ மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், கிருஷ்ண தேவராயர், மைசூரு மன்னர் ஜெய சாம்ராஜ் போன்றோர் இங்கு திருப்பணி செய்துள்ளனர். எப்படி செல்வது: பெங்களூருவில் இருந்து 45 கி.மீ., விசேஷ நாள்: ஏகாதசி, திருவோணம். நேரம்: காலை 8:30 - 2:00 மணி; மாலை 4:30 - 7:00 மணிதொடர்புக்கு: 96203 26915அருகிலுள்ள கோயில் : மாகடி சோமேஸ்வரர் 6 கி.மீ., (மன நிறைவுக்கு...)நேரம்: காலை 7:00 - இரவு 7:00 மணிதொடர்புக்கு: 98449 96443