இதுதான் உண்மை
நவ.23 பிறந்த நாள்* எந்த பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டே இருக்கிறது. இதுதான் உண்மை.* மனதில் எழும் ஆசைகளை நியாயமானதுதானா என்று யோசி. * பொருள் இல்லாதவன் உண்மையான ஏழை அல்ல. பேராசை கொண்டவனே ஏழை. * பிறருக்கு அறிவுரை வழங்குவதைவிட பயனுள்ள பணிகளில் ஈடுபடு. * வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொள். * கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் மனித சமுதாயம் என்பது, விலங்குகள் வாழும் காடாக மாறி விடும். * சாப்பிடுவதற்காக உயிர் வாழ்வது கூடாது. உயிர் வாழ்வதற்காக மட்டுமே சாப்பிட வேண்டும்.* நல்லதை பார்க்கவும், நல்ல செயல்களை செய்யவும் விரும்பு. * மனிதனையும், கடவுளையும் இணைக்கும் பாலமே வழிபாடு. * தங்கத்தின் மூலம் பல அணிகலன் செய்யலாம். அதுபோல் பல கடவுள் இருந்தாலும் உணர்த்தும் தத்துவம் ஒன்றே. * கடவுளுடன் பேசுவது வழிபாடு. கடவுள் பேசுவதைக் கேட்பது தியானம். * மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரித்தால் கவலைகள் மறைந்துவிடும். * கடவுளின் படைப்பு ஒவ்வொன்றிற்கும் ஓர் அர்த்தம் இருக்கிறது. * பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் பிறருக்கு செய்ய வேண்டும். சொல்கிறார் சாய்பாபா