உள்ளூர் செய்திகள்

மனஉறுதியே தேவை

* நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும். மற்றவை எல்லாம் பயன்படாது. * ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரது செயல்பாடுகளே ஆராய்ந்து அறியும் உரைகல். * ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்வதும், அவ்வாறு செய்தபின் அவரைப்பற்றி பயப்படுவதும் தீராத துன்பம் தரும். * தீய செயலால் பொருள் சேர்த்துப் பாதுகாத்தல் என்பது, சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போன்றது.* செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவரின் நட்பு கனவிலும் இனிமையை தராது.* ஒருவர் தன் பொருளைக் கொண்டு ஒரு செயலைச் செய்வது என்பது, மலைமேல் பாதுகாப்பாக நின்று யானைப் போரை பார்ப்பதற்கு சமம். * நம்மிடம் உள்ள பற்றுகளை அகற்றுவதற்காகவே, பற்றில்லாதவரை பற்றி நிற்க வேண்டும்.* பேராசை என்னும் பெருந்துன்பம் தொலைந்தால் இன்பம் வரும். * நல்ல நுால்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோல, பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.* துன்பத்தினாலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நண்பரின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல். * உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்த நெறியில் நீயும் செல். என்கிறார் திருவள்ளுவர்