மொட்டை விநாயகர்
UPDATED : செப் 17, 2012 | ADDED : செப் 17, 2012
மதுரையில் உள்ளது மொட்டை விநாயகர் கோயில். தனது காவலுக்காக பார்வதி தேவியால் படைக்கப்பட்டவர் கணபதி. பார்வதி தேவியை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிவன், கணபதியின் தலையை வெட்டினார். இதை உணர்த்தும் விதமாக இங்குள்ள விநாயகர், தலையில்லாமல் மொட்டை கணபதியாக அருள்பாலிக்கிறார். டாக்டர்கள் சிலர், ஆபரேஷன் செய்யும் முன்பு இவருக்கு தேங்காய் காணிக்கை செலுத்திவிட்டு பணியைத் துவக்குகின்றனர். புதிதாக ஏதேனும் செயலைத்தொடங்கும்போது சீட்டு மூலம் உத்தரவு கேட்கும் முறையும் இங்குள்ளது. வியாபாரிகள் தினமும் கடைதிறக்கும் முன்பு சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்து விட்டு செல்கின்றனர்.