மனம் போன போக்கில் போகாதீர்!
* மனம் போன போக்கில் போகாமல், தீயசெயல்களில் இருந்து விலகி நல்லவற்றை மட்டும் சிந்திப்பவனே அறிவில் சிறந்தவன்.* அறிவே மனிதனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி. பகைவராலும் அறிவைக் கவர முடியாது. பாதுகாப்பு அரண் போல அறிவு மனிதனைப் பாதுகாக்கும்.* யார் எந்த விஷயத்தை சொன்னாலும், அதை அப்படியே ஏற்பது கூடாது. அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு.* எதிர்காலத்தில் நடக்க இருப்பதை அறிபவனே அறிவுடையவன். அதனை அறிய இயலாதவனை அறிவிலி (முட்டாள்) என்றே சொல்ல வேண்டும்.* அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுபவனே அறிவில் சிறந்தவன். அதைப் பொருட்படுத்தாமல் எதிர்கொள்பவன் அறிவில்லாதவன்.* வருவதை அறிந்து, அதற்கேற்றபடி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் அறிவுடையவர்களுக்கு அதிர்ச்சி தரும் துன்பம் வாழ்வில் உண்டாகாது.* சமுதாயத்தில் சிறந்தவர்கள் பின்பற்றிய நல்வழியில் நடப்பவனே அறிவாளி. இத்தகையோர் எல்லோரிடமும் நட்பு பாராட்டி மகிழ்வர்.சொல்கிறார் திருவள்ளுவர்