உள்ளூர் செய்திகள்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்!

* எல்லா செயல்களிலும் பொதுநலன் இருக்க வேண்டும். எல்லா பொருட்களும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். வழிபாட்டைக் கூட தனக்கென இல்லாமல் எல்லாருக்குமாக செய்ய வேண்டும். இப்படி செய்தால், யாரையும் ஒதுக்கி வைக்கும் நிலை வராது.* உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, உலகுக்கு கடவுள் ஒருவரே. பல தெய்வங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள் ஆன்மிகம் பற்றி அறியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும்.* தெய்வங்களின் பெயரை சொல்லி மிருகங்களை பலியிடக்கூடாது. மாமிசம் உண்ணும் மக்களைப் பார்த்து நான் உள்ளம் கலங்குகிறேன்.* பிற உயிர்களைக் காப்பாற்றும் ஜீவ காருண்யத்தை கடைபிடித்தால் தான், கடவுளின் அருளைப் பெற முடியும்.* பசியினால் ஏழைகள் பலரும் தூங்காமல் உழலுகின்றனர். அவர்களுக்கு உணவளித்து, அவர்களையும் நிம்மதியாக தூங்க வையுங்கள்.* உடலைக் கெடுப்பது உணவு, பெண் பழக்கம், தூக்கம், பயம்... இந்த நான்கில் பெண் பழக்கமே மிகுந்த கேட்டை விளைவிக்கும்.* இறைவனின் திருவடிகளை ஒருமித்த மனதுடன் வணங்குங்கள். உள்ளே ஒன்றும், வெளியே ஒன்றுமாய் பேசுபவர்களிடம் பழக்கம் கொள்ளாதீர்கள்.சொல்கிறார் வள்ளலார்!