உள்ளூர் செய்திகள்

தலை ஆட்டினால் போதும்!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ளது தலையாட்டி விநாயகர் கோயில். கெட்டி முதலி என்னும் குறுநில மன்னன் இக்கோயிலை கட்டும் முன்பு விநாயகரிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன் பின்பு, பணியைத் துவங்கினான். கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து 'பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?' என்று கேட்டான். அதற்கு இவர், 'நன்றாகவே கட்டியிருக்கிறாய்' என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினார். எனவே இவருக்கு 'தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்று சாய்த்தபடி இருப்பதை காணலாம்.தொழில், கட்டடப்பணிகளைத் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பதால், இவரைக் 'காவல் கணபதி' என்றும் அழைக்கின்றனர்.

திறக்கும் நேரம்:

காலை 6 - 12, மாலை 4 - இரவு 8.30.

இருப்பிடம்:

ஆத்தூர் பஸ்ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரம்.

போன்:

04282 320 607