கிளம்புவோமா கும்பகோணத்துக்கு!
UPDATED : பிப் 16, 2014 | ADDED : பிப் 16, 2014
வாசகர்களே! பிப்.15ல் மாசிமகத் திருவிழா கும்பகோணத்தில் நடக்கிறது. இதையொட்டி, இங்குள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று வாருங்கள். மகாமகத்தன்று, இந்தக் கோயில்களில் உள்ள சிவன் மகாமக குளத்திற்கும், பெருமாள் காவிரிக்கும் எழுந்தருள்வர் என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் - சிறப்பு - திறக்கும் நேரம் - இருப்பிடம்/போன்1. கும்பேஸ்வரர் - உலகம் அழிந்த காலத்தில், பிரம்மா தன் படைப்புக் கலன்களைக் காப்பாற்ற, அமிர்தம் நிரம்பிய ஒரு கும்பத்தில் வைத்து மிதக்க விட்டார். அந்தக் கும்பம் தங்கிய இடம் இது. அம்மன் மங்களாம்பிகை. - காலை 6.00 - 12.30 மாலை 4.00 - 9.00 - பஸ் ஸ்டாண்ட் அருகில். 0435- 242 0276.2. பாணபுரீஸ்வரர் - உலகம் அழிந்த காலத்தில், தண்ணீரில் மிதந்த கும்பத்தை சிவன் பாணத்தால் உடைத்த தலம் அம்மன் சோமகலாம்பாள். - காலை 7.00 - 11.30 மாலை 5.00 - 8.00 - கும்பகோணம் நகர எல்லையிலுள்ள பாணாத்துறை.3. கோடீஸ்வரர் - கோடி லிங்கங்களை தரிசித்த பலன். பாவம் நீங்கும். அம்மன் பந்தாடு நாயகி. - காலை 7.00 - 12.00 மாலை 5.00 - 8.00 - கும்பகோணம்-சுவாமிமலை ரோட்டில் 4 கி.மீ., 4. ஆதிகம்பட்ட விஸ்வநாதர் - நகை வியாபாரிகள், ஆசிரியர், மாணவர்கள் பிரார்த்தனை தலம். அம்பாள் ஆனந்தநிதி. - காலை 7.00 - 12.00 மாலை 5.00 - 8.00 - கம்பட்ட விஸ்வநாதர் கீழவீதி.5. காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் - மகாமக குளத்திற்கு இந்தக் கோயிலிலிருந்து மட்டுமே, சிவனுக்கு பதிலாக, காமாட்சி எழுந்தருள்வாள். - காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 - கும்பகோணம் நாகேஸ்வரம் கீழ வீதி.6. கவுதமேஸ்வரர் - சிவனால் உடைக்கப்பட்ட கும்பத்தில் சுற்றப்பட்ட நூல் லிங்கமாக மாறிய தலம், விருச்சிக ராசி கோயில், பசுதானம் செய்யலாம். - காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 - மகாமக குளத்தின் தெற்கு கரை.7. அமிர்தகடேஸ்வரர் - ஒற்றைக் காலில் தவமிருக்கும் தவசு அம்பாள், சிவன் உடைத்த குடத்தில் இருந்த அமிர்தம் தங்கிய இடம். அம்பாள் அமிர்தவல்லி நாயகி. - காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 - கும்பகோணம்- வலங்கைமான் ரோட்டில் 9 கி.மீ., 98653 06840. 8. அபிமுகேஸ்வரர் - மூன்று முக பிரம்மா சந்நிதி, அமிர்த கலசத்தை சிவன் உடைத்தபோது, அதிலிருந்த தேங்காய் விழுந்து, லிங்கமான தலம், அம்பாள் அமிர்தவல்லி. - காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - மகாமக குளத்தின் கீழக்கரை.9. நாகேஸ்வரர் - தேர் வடிவ கோயில். பிரளய கால ருத்திரர் சந்நிதியில் ஞாயிறன்று ராகுகாலத்தில் பூஜை, ராகுதோஷ நிவர்த்தி தலம். - காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - கும்பேஸ்வரர் கோயிலின் கிழக்கே. 0435-243 0386.10. காசி விஸ்வநாதர் - கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு நதி தேவதைகளுக்கு சந்நிதி, வயது அதிகமாகியும் ருதுவாகாத பெண்களின் பிரார்த்தனை தலம். - காலை 6.00 -12.00 மாலை 4.30 - 8.00 - மகாமக குளத்தின் வடக்கு கரை. 0435- 240 0658.11. சோமேஸ்வரர் - கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி லிங்கமான தலம், முருகனின் வலது பாதத்தில் பாதரட்சை, அம்மன் சோமசுந்தரி. - காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - கும்பேஸ்வரர் கோயில் பொற்றாமரை குளக்கரை. 0435-243 0349.12. காளஹஸ்தீஸ்வரர் - கார்த்தியாயினியுடன் கல்யாண சுந்தரேஸ்வரர் மாப்பிள்ளை கோலம், 18 கை கொண்ட அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை சந்நிதி. - காலை 6.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - மடத்து தெரு.13. சாரங்கபாணி - தேர் வடிவக்கோயில், கோமளவல்லி தாயார், மாசிமகத்தன்று தெப்பம். - காலை 6.30 -12.00 மாலை 4.30 - 9.00 - பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., 94435- 24529, 0435-243 0349.14. சக்ரபாணி - சுதர்சனஹோமம் செய்ய சிறந்த தலம், சுதர்சனவல்லி தாயாருடன் சக்கரராஜன் சந்நிதி, மகாமக புண்ணிய பலனை சக்ரபாணிக்கு அர்ப்பணிப்பது மரபு. - காலை 6.30 - 12.00 மாலை 4.30 - 9.00 - கும்பகோணம்-சுவாமிமலை ரோட்டில் 2 கி.மீ., 0435-240 3284.15. ஆதிவராகப் பெருமாள் - சிறிய கோயில், சுவாமி மடியில் லட்சுமி தாயார். - காலை 7.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - சக்ரபாணி கோயில் அருகில். 94422 26413.16. ராஜகோபால சுவாமி - செங்கமலத்தாயார், பசு பின்னால் நிற்க கையில் கோலுடன் சுவாமி, சப்தநதிகளுக்கும் அருள்பாலித்தவர். - காலை 7.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - பெரிய பஜார் தெரு.17. ராமசுவாமி - தென்னக அயோத்தி, மூன்று சகோதரர்கள், சீதையுடன் ராமர், வீணை இசைக்கும் அனுமன் சிலை, (மகாமகத்தன்று மட்டும் காவிரிக்கு எழுந்தருளல்) - காலை 7.00 - 12.00 மாலை 4.30 - 8.00 - பெரியகடைவீதியின் தென்கோடி.மகாமகக்குளக்கரையில் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், பாணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாகேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருத்தீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காநரேஸ்வரர், முத்த தீர்த்தேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர் ஆகிய 16 லிங்கங்கள் உள்ளன.